மும்பையில் ரிசர்வ் வங்கி உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
#India
#Bank
#Tamilnews
#Public
#Bomb
#Mumbai
#Threat
#lanka4_news
#lanka4.com
#Lanka4indianews
Prasu
1 year ago

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
இதேபோல் மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்:



