டெங்குவால் யாழில் மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு!

#SriLanka #Death #Lanka4 #Dengue #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
டெங்குவால் யாழில் மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு!

டெங்குக் காய்ச்சலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் ஆரம்பத்தில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

images/content-image/2023/12/1703667326.jpg

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்து உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில், நேற்றைய தினம் மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை நோயாளர் விடுதி நிரம்பிக் காணப்படுவதாகவும் வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4