அடுத்த வருடம் வாகன சாரதிகளுக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு
பிரான்ஸ் உள்துறை அமைச்சு கடந்த ஏப்ரல் மாதத்தில், அடுத்த 2024ம் ஆண்டு முதல் உள்ளூர் வீதிகளில், (30km/h, 50km/h) குறித்த வேகத்தை விடவும் மணிக்கு 5 கிலோமீட்டர் அதிகமான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளுக்கு, ஓட்டுனர் உரிமத்தில் இருந்து புள்ளிகள் கழிக்கப்பட மாட்டாது எனவும், ஆனால் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை வாகன சாரதிகள் வரவேற்றுள்ள நிலையில், பல சமூக நலத்துறை அமைப்புக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
முன்பு வேக வீதிகளில் (autoroute) மணிக்கு 130km/h, 110km/h, 90km/h கிலோமீட்டர் வேகத்தை விடவும் அதிகமான வேகத்தில் பயணம் செய்தால்,, 5km/h வேகத்தை கழித்து ஒட்டுனர் உரிமத்தில் புள்ளிகள் கழிக்கப் படுவதுபோல், வரும் ஜனவரி மாதம் முதல் உள்ளூர் வீதிகளில், உதாரணமாக 50km/h வேகத்தை விடவும் 55km/h வேகத்தில் பயணித்தால் ஓட்டுனர் உரிமத்தில் புள்ளிகளை கழிக்காமல், தனியே தண்டப்பணம் மட்டும் அறவிடப்படும்.
குறித்த வேகத்தை விட அதிகரித்தால் புள்ளிகளும், தண்டப்பணமும் அறவிடப்படும்.