நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (28.12) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல்  மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4