புதிதாக கையடக்க தொலைபேசி வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது பதிவை உறுதிப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதா என்பதை வாங்குவதற்கு முன் சரிபார்க்குமாறு பணிப்பாளர் மேனகா பத்திரன அறிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் கையடக்கத் தொலைபேசி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, தொலைபேசியின் IMEI எண்ணுடன் SMS அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.
பதிவு நிலையைச் சரிபார்க்க, IMEI எண்ணை உள்ளிட்டு” 1909 க்கு SMS அனுப்புமாறு மேனகா பத்திரன அறிவித்துள்ளார்.