இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#India #Corona Virus #SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் 6 கொவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 4,097 என்று நாட்டின் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த காலங்களில் கொவிட் தொற்றினால் மக்கள் பாரிய அளவு பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.