கிளிநொச்சியில் முழுநிலா பெருநாள் நிகழ்வு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப முன்பள்ளி பருவ அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் முழுநிலா பெருநாள் 12 வது நிகழ்வு இன்று (28.12) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.

