அயோத்தி இராமர் கோவில் ஜனவரி 22 திறக்கப்படவிருக்கிறது !
#India
#Temple
#கோவில்
#லங்கா4
#Open
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

கொல்கத்தா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், வரும் ஜனவரி 22ம் தேதி திறக்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு வந்தது. அவர் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியலையும், மதத்தையும் கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ராமர் கோயில் திறப்பு விழாவில், மம்தா பானர்ஜியோ, மேற்குவங்க அரசு அல்லது திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலோ யாரும் பங்கேற்க மாட்டார்கள்’ என்றார்.



