பசிலின் சதியால் நிறைவுக்கு வந்த கோட்டபாயவின் அரசியல் பயணம்! கொழும்பு ஊடகம் தகவல்

#SriLanka #Gotabaya Rajapaksa #Sri Lanka President #Basil Rajapaksa #Lanka4
Mayoorikka
2 years ago
பசிலின் சதியால்  நிறைவுக்கு வந்த கோட்டபாயவின் அரசியல் பயணம்! கொழும்பு ஊடகம் தகவல்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

 கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே திலித் ஜயவீர இவ்வாறு தெரிவித்திருந்தார். தேசியவாத அரசியலை தாம் 30 வருட காலமாக முன்னெடுப்பதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

 அத்துடன், தேசியவாதம் என்பது இலங்கை மாத்திரமின்றி அனைத்து நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1703818814.jpg

 இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள தேசியவாதம் அத்தியாவசியமானது முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

 எனினும், அவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த பின்னணியில், இதன்படி, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் தேசியவாதத்தை எதிர்க்கும் பசில் ராஜபக்ச மறைமுகமாக இலங்கையை ஆட்சி செய்யததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்த நிலையில், பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டபய ராஜபக்சவின அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4