இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நில அதிர்வுகள் - இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Earthquake
#Lanka4
#lanka4Media
#lanka4news
#lanka4.com
PriyaRam
2 years ago
இந்தியப் பெருங்கடலின் மாலைத்தீவுக்கு அருகில் இன்று காலை நான்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக முதலாவது நில அதிர்வும், 5.8 மெக்னிடீயூட்டாக இரண்டாவது நில அதிர்வும் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 மெக்னிடியூட் அளவிலான மேலும் இரண்டு நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது