72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட கேப்டனின் உடல்

#India #Death #Actor #Tamilnews #Kollywood #Politician #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
2 years ago
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட கேப்டனின் உடல்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.

தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு நோக்கி சென்றது. கேப்டன் விஜயகாந்தின் உடலை சுமந்து செல்லும் வாகனத்துடன் தொண்டர்களும் ரசிகர்களும் ஓடோடி வந்தனர்.

images/content-image/1703878433.jpg

திரையுலகினர், பொதுமக்கள் என அலைகடலென திரண்டு வழிநெடுகிலும் விஜயகாந்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அவரது உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

images/content-image/1703878446.jpg

இறுதிச்சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள், திரையுலகினர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கை பொதுமக்கள் காண தே.மு.தி.க. அலுவலகத்தின் முன் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4