மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்

#India #Death #Arrest #Attack #Blast #Manipur #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
4 months ago
மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. 

காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர். 

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இன்று பிற்பகல் 3.30 மணி முதலே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.