விருச்சிக ராசியினருக்கு வருவாயில் இருந்த தடை விலகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
4 months ago
விருச்சிக ராசியினருக்கு வருவாயில் இருந்த தடை விலகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். கார்த்திகை 1: உங்களை விமர்சனம் செய்தவர் தவறை உணருவார்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சிக்கு சூழ்நிலை சாதகமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லை அளித்தவர் விலகுவர். மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர். பிறரின் உதவியால் உங்கள் வேலை நிறைவேறும். திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: நண்பர் உதவியுடன் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும். குடும்பத்தேவையறிந்து அதை நிறைவேற்றுவீர். பூசம்: பண வரவில் இருந்த தடை விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். ஆயில்யம்: எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

சிம்மம்

மகம்: உங்கள் செயல்களில் குழப்பம் தோன்றும். குடும்பத்தில் பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நல்லது. பூரம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். உடல்நிலையில் கவனம் அவசியம். உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றம். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். மனதில் தேவையற்ற பயம் வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். பண நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும். அஸ்தம்: உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். சித்திரை 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். எண்ணம் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுவாதி: பழைய பிரச்னை முடியும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். பொருளாதார நெருக்கடி விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்.வருவாயில் இருந்த தடை விலகும். கேட்டை: முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு

மூலம்: துணிச்சலுடன் செயல்படுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பூராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.வியாபாரத்தில் லாபம் காண்பீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பாராத சங்கடம் தோன்றும். செயல்களில் எதிர்பார்த்த நன்மை அதிகமாக கிடைக்கும். திருவோணம்: புதிய முயற்சி இன்று வேண்டாம். பணவரவில் தடை ஏற்படும் அதையும் சமாளிப்பீர்கள். அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.வருவாய் அதிகரிக்கும்.நிதி நிலை உயரும். சதயம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். போட்டியாளர் விலகுவர். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். வருமானம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவீர். உத்திரட்டாதி: எதிரி விலகிச்செல்வார். முயற்சியில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராகும். ரேவதி: இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் தீரும்.