மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் தீவிபத்து : 06 பேர் உயிரிழப்பு!
#India
#SriLanka
#Accident
#Lanka4
#fire
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், தீயை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தீயின் நடுவில் தொழிற்சாலைக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கடினமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



