டிசம்பர் 31 திகதி எதற்காக விஷேடமாக கொண்டாடப்படுகிறது?
சென்னை: இன்றைய நாள் டிசம்பர் 31, 2023 மிகவும் விசேடமான நாள். இது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இப்படி நடக்கும். இதற்கு பெயர் தேவதை எண்கள் ஆகும் (Angel Numbers). 2023 ஆம் ஆண்டு இன்னும் 1 மணி நேரத்தில் முடிய போகிறது.
உலக மக்கள் அனைவரும் 2024 ஆம் ஆண்டை வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்காக பல்வேறு வகையில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அது போல் ஆன்மீக ரீதியில் பிறக்க போகும் ஆண்டு நன்மையை தருமா என்பது குறித்து ஜோதிடர்களும் ஆராய்ந்து வருகிறார்கள்.
மக்களும் பிரார்த்தனைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய நாள் சிறப்பான நாள் என அழைக்கப்படுகிறது. அத்துடன் ஏஞ்சல் எண் என்றும் அழைக்கிறார்கள். டிசம்பர் 31, 2023 ஐ 31/12/23 என்றும் 12/31/23 என்றும் எழுதலாம். 12/31/23 என்ற தேதியில் 123123 என்பதே ஏஞ்சல் எண் ஆகும்.
இது போல் அறிய நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுமாம். கடைசியாக 1923 ஆம் ஆண்டு நடைபெற்றது. அடுத்ததாக 2123 ஆம் ஆண்டு நடைபெறும். 123123 என்ற எண் ஏன் சிறப்பு என்றால் இது நியூமராலஜியுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்தியாவில் தேதி/மாதம்/ஆண்டு என எழுதப்பட்டாலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாதம்/தேதி/ ஆண்டு என்ற வடிவத்தில்தான் எழுதப்படுகிறது.
இந்த எண் ஏஞ்சல் எண் என்று அழைக்கப்படுகிறது. இந்த 123 எண்ணில் 1- புதிய தொடக்கங்களை குறிக்கும். எண் 2 - நல்ல நேரங்களில் அடையும் இன்பத்தைக் குறிக்கிறது. எண் 3- கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை குறிக்கிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த 123 ஒரு முறை மட்டும் வராமல் இரு முறை வருகிறது. எனவே இது சிறப்பு வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது. அதாவது முன்னேற்றத்திற்கான எண்ணாகவும் சொல்லப்படுகிறது.
அது போல் 1+2+3= 6, இந்த 6 என்ற எண் வளர்ப்பு, சமநிலை மற்றும் அன்பு போன்ற குணங்களுடன் தொடர்புடையது. இதனால் இன்றைய தேதியில் உள்ள எண்கள் பாசிட்டிவ் எண்ணங்களை கொடுக்கின்றன.
ஏஞ்சல் எண்கள் மிகவும் சக்த வாய்ந்தவை, மாயா ஜாலமானவை. இந்த எண்கள் பிரபஞ்சத்திலிருந்து அனைத்து செய்திகளையும் வழங்குகின்றன. அது போல் தேவதை எண் 333 என்பதை பார்க்கும் போதெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் வளருவீர்கள் என்பது அர்த்தம்.