இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தீவின் மற்ற பகுதிகளில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4