மதுபானம் மற்றும் சிகரட்டின் விலைகளில் மாற்றம்!

#SriLanka #Lanka4 #Alcohol #Tamilnews #sri lanka tamil news #Ciggerette
Thamilini
2 years ago
மதுபானம் மற்றும் சிகரட்டின் விலைகளில் மாற்றம்!

இன்று (01.01.2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை திருத்தியமைக்கவுள்ளதாக இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சி அறிவித்துள்ளது.  

இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 375 மில்லி மற்றும் 180 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை முறையே 50 ரூபாவாலும், 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, வற் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4