பிரான்ஸின் சோம்ப்ஸ்-எலிசேயில் புத்தாண்டுக் கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டது
உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் (Champs-Élysées) நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புதுவருட கொண்டாட்டத்தைக் காண 800,000 பேர் ஒன்று திரண்டனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 800,000 பேர் பங்கேற்றிருந்ததாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம் மாலை 7 மணிக்கு ஆரம்பித்தது. Marine Neuilly, Piu Piu மற்றும் Barbara Butch ஆகிய கலைஞர்களில் DJ நிகழ்ச்சியும், பாடகர் Slimane தனது ‘Mon Amour' என ஆரம்பிக்கும் புத்தாண்டு பாடலையும் பாடினார்.
11.59 மணிக்கு வாணவேடிக்கை ஆரம்பமானது. பின்னர் 12,00 மணிக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ கலந்துகொண்டிருந்தார்.
தலைநகர் பரிசில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 6,000 வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.