மீண்டும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலை ஏற்படும்! சிறிதரன்

#SriLanka #Kilinochchi #taxes #Lanka4 #sritharan #Tax #Vat
Mayoorikka
2 years ago
மீண்டும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலை ஏற்படும்! சிறிதரன்

வற் வரி அதிகரிப்பானது மிகவும் பொருளாதார இக்கட்டான நிலையிலுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக நாடாளுமன்ற உருப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

 வற் வரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 மக்களுக்கு வருமானம் இல்லை மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும். 

சுயமாக மக்களின் நலன்களை பற்றி அரசு சிந்திக்காது சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயத்தமாகவே ஜனாதிபதி வருகை உள்ளது. 

பிரச்சனையை பாராளுமன்றத்திலேதான் தீர்க்க முடியும் என்கிறார். கட்டிடம் கட்டி தாறன் கைத்தொழில் பேட்டை அமைக்கிறேன் என்று மாத்திரம் சொல்லதற்காக வருகிறார்.

 வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கிய காசுக்கு ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தேர்தலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர்தலும் நடைபெறவில்லை. 

 தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடு தான் அவர் வடக்குக்கு வருகிறார் எனவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!