தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ. 3500 கோடி வருமானத்தை ஈட்டியிருக்கிறது!

#Cinema #TamilCinema #Lanka4 #திரைப்படம் #Revenue #வருமானம் #லங்கா4 #தமிழ் #lanka4Media #lanka4news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
4 months ago
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ. 3500 கோடி வருமானத்தை ஈட்டியிருக்கிறது!

கடந்த 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உற்சாகமான ஆண்டாக மாறியிருக்கிறது. ஆண்டின் கடைசி வாரமான 29-ம் தேதி வெளியான 11 படங்களையும் சேர்த்து கடந்த ஆண்டு 256 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

 இதில் மெகா, மீடியம், சிறுபட்ஜெட் படங்களும் அடங்கும். இதுவரை எந்த வருடமும் இத்தனைப் படங்கள் தமிழில் வெளியானதில்லை என்பதால் இதை ஆரோக்கியமாக பார்க்கலாம் என்கிறார்கள்.

 அதே போல முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம், தமிழ் சினிமாவின் மொத்த வருமானமும் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.2950 கோடி வசூலித்த தமிழ் சினிமா, இந்த வருடம் ரூ.3500 கோடிவருமானம் பெற்றிருக்கிறது. 

சேட்டிலைட், ஓடிடி, இசை, வெளிநாட்டு, டப்பிங் உரிமை உள்ளிட்ட விற்பனையை உள்ளடக்கிய வருமானம் இது. இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, “உண்மைதான்” என்றார்.

 “அதிகம் வசூல் செய்த டாப் 15 படங்கள்னு எடுத்தீங்கன்னா, அதுல, ஜெயிலர், லியோ, வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2, வாத்தி, மார்க் ஆண்டனி, மாவீரன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விடுதலை 1, மாமன்னன், பத்து தல, டிடி ரிட்டர்ன்ஸ், பிச்சைக்காரன் 2, போர் தொழில் படங்கள் இருக்கு. அடுத்தக்கட்டமா வசூல் செய்த படங்கள்னா, ரன் பேபி ரன், சித்தா, அயோத்தி, இறுகப்பற்று, கான்ஜூரிங் கண்ணப்பன் படங்கள் இருக்கு. சிறு பட்ஜெட்ல உருவாகி, அதாவது 4 கோடில இருந்து 5 கோடி ரூபாய்க்குள்ள எடுக்கப்பட்ட படங்களைப்பார்த்தா, டாடா, குட்நைட், பார்க்கிங், ஜோ ஆகிய 4 படங்கள் நல்ல வசூல் பண்ணியிருக்கு” என்கிறார் அவர்.

images/content-image/1704099668.jpg

 2023-ல் வெளியான 256 படங்களில் வெற்றிபெற்ற படங்கள் வெறும் 24-தான்! இது,மொத்தம் வெளியான திரைப்படங்களில் 9 சதவிகிதம் மட்டுமே. இதில் பல படங்கள் நூறு கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கிறது.

 அதே நேரம், வெளியான மொத்தப் படங்களில் 188 படங்கள் சிறு பட்ஜெட் படங்கள். இதில், 4 படங்கள் மட்டுமேவெற்றிபெற்றிருக்கின்றன. 10-15 படங்கள்லாபம் இல்லாவிட்டாலும் போட்டது கிடைத்ததால் தப்பித்து இருக்கிறது.மற்ற 168 திரைப்படங்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து இருக்கின்றன.

 கரோனா காலகட்டத்தில் திரைப்படங்களின் ஓடிடி பிரீமியர் அதிகளவு இருந்தது. 2021-ம்ஆண்டில் 45 படங்கள்நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாயின. இதனால் திரையரங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஓடிடிதளங்கள் உருவெடுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடக் கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் எழுந்தன. ஆனால், கடந்த 2022-ம்ஆண்டு 25 படங்கள் மட்டுமே ஓடிடி-யில் நேரடியாக வெளியிடப் பட்டன.

 2023-ம் ஆண்டுஅந்த எண்ணிக்கை மொத்தமாகச் சரிந்துவெறும் 6 படங்கள் மட்டுமே பிரீமியர்ஆகியிருக்கிறது. அதுவும் சிறிய பட்ஜெட்படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. இதனால் இனி பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.

 “ஆமா. அச்சுறுத்தலாக கருதப்பட்டஓடிடி தளங்கள் இப்போ ‘சப்ளிமென்டாக’ மாறிடுச்சு. தியேட்டர்ல வெளியான பிறகுதான் ஓடிடி தளங்கள்லபடங்களைப் பார்க்கமுடியும் என்ற நிலை வந்திருக்கு. இது பெரிய மாற்றம்தான்” என்கிறதனஞ்செயன், பான் இந்தியா படங்களின் தாக்கம் 2023-ல்குறைந்திருக்கிறது என்கிறார்.

 “2022-ம் ஆண்டு ஆர்ஆர்ஆர், சீதாராமம், கே.ஜி.எஃப் 2,காந்தாரா, சார்லி 777-எனநிறைய படங்கள் வசூலித்தது. ஆனா, 2023-ல் ‘ஜவான்’ மட்டும்தான் பான் இந்தியா முறையில் பெரிய வசூலை தமிழ்ல எட்டியிருக்கு. அதுவும் அட்லீ படம் என்பதால்தான். வேறுஎந்த வேற்றுமொழி படமும் தமிழ்நாட்டுல பெரிய வசூல் பண்ணலை” என்கிறார் தனஞ்செயன்!