பிரான்ஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறிதளவான வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 380 பேர் கைது
#Arrest
#Police
#France
#New Year
#கைது
#புத்தாண்டு
#லங்கா4
#பிரான்ஸ்
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
நாடு முழுவதும் 90,000 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு, புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
முந்தைய சில ஆண்டுகளை விட மிக குறைந்த அளவு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். தலைநகரில் 6000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சோம்ப்ஸ்-எலிசேயில் 800,000 பேர் ஒன்றுகூடி புதுவருடத்தை வரவேற்றிருந்தனர். மாலை 3 மணி முதலே பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிகப்பட்டிருந்தனர். தலைநகர் பரிசில் 69 பேரும், நாடு முழுவதும் 380 பேரும் கைது செயப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு நாடு முழுவதும் 490 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.