கனடாவின் கியூபேக் மாகாணத்தில் புத்தாண்டுக் கொண்டாடத்தின் போது நோய்கள் பரவும் அபாயம் குறித்து அறிவுறுத்தல்

புத்தாண்டு விடுமுறைக் கொண்டாட்டங்களின் போது நோய் பரவுகை குறித்து கவனம் செலுத்துமாறு கியூபேக் மாகாண அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் வைத்தியசாலைகளில் ஏற்கனவே நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் சுவாச நோய்கள் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாகவும் கொண்டாட்டங்களின் போது இந்த பரவுகை அதிகரிக்கலாம் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாண வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தொடர்ச்சியாக நிரம்பி வழிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.



