அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழாவையிட்டு அதற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

#India #Temple #Lanka4 #கோவில் #லங்கா4 #Bomb #Threat #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
4 months ago
அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழாவையிட்டு அதற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

லக்னோ: வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு நடக்கும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது குறித்து உ.பி போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்கள் அந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்நிலையில் பாரதிய கிசான் மஞ்சாவின் தேசியத் தலைவர் தேவேந்திர திவாரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ‘அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சிறப்பு காவல் பிரிவான எஸ்டிஎப்-யின் ஏடிஜிபி அமிதாப் யாஷ் ஆகியோர் மீது வெடிகுண்டுகளை வீசுவோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

images/content-image/1704120514.jpg

 இந்த இ-மெயில் பதிவை கோல்ப் சிட்டி காவல் நிலையத்தில் புகாராக தேவேந்திர திவாரி அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாரதிய கிசான் மஞ்சாவின் தேசியத் தலைவர் தேவேந்திர திவாரிக்கு ஜூபர் கான் என்பவர் இ-மெயில் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் ஜுபர் கான் குறிப்பிட்டுள்ளார். இந்த இ-மெயில் குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது’ என்று கூறினர்.