இலங்கை மின்சார சபை ஊழியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை : மின்தடை ஏற்படுமா?

#SriLanka #Protest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை : மின்தடை ஏற்படுமா?

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இதை ரணிலுடன் சேர்ந்து விற்க காஞ்சன விரும்புகிறார். இதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றினால் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும். 

இலங்கை மின்சார சபையின் தலைமைக்கு முன்பாக மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம். மூன்று நாட்களுக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4