இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #weather #Rain #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #England
Dhushanthini K
11 months ago
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று (02.01) மாலை வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என met office  அறிவித்துள்ளது. 

தென்மேற்கு மற்றும் தெற்கு இங்கிலாந்து, தெற்கு வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் அதிக மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

நண்பகலில் இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் தென்மேற்குப் பகுதிகளில் அதிகளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 

சாலைகளில் வெள்ளம் ஏற்படும் என்றும், இதனால் பயணதாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!