விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #education #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

வலயக் கல்வி அலுவலகங்களில் விசேட தேவையுடைய பிள்ளைகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிள்ளைகளை உரிய வயதில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு அனுப்புவது தொடர்பான பாடத்திட்டத்தையும் அமைச்சு தயாரித்து மதிப்பீட்டுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாகவும், கடுமையான ஊனமுற்ற குழந்தைகளுக்கு வீட்டில் கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அத்தகைய மூன்று குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 ஊனமுற்ற குழந்தைகள் பதிவாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4