இந்த ஆண்டு விடுமுறைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

#SriLanka #government #Lanka4 #leave
Mayoorikka
2 years ago
இந்த ஆண்டு விடுமுறைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

2024 ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே அதிகளவிலான விடுமுறைகள் காணப்படுகின்ற நிலையில் பெரும்பாலான விடுமுறைகள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் காணப்படுகின்றன.

 இந்த ஆண்டில் வார இறுதிகளில் கிட்டத்தட்ட 10 விடுமுறைகள் காணப்படுகின்றன.

 அவற்றில் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தைப்பொங்கல் திருநாள் விடுமுறை திங்கட்கிழமை வருகின்றது. பெப்ரவரி மாதத்தில் பௌர்ணமி விடுமுறை வெள்ளிக்கிழமை வருகின்கிறது.

 புனித வெள்ளி மற்றும் மகா சிவராத்திரி விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன. சித்திரை மாதத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறன.

 மே மாத பௌர்ணமி விடுமுறை வார இறுதியில் வருகின்றது. ஜூன் மாதத்தில் பௌர்ணமி மற்றும் ஹஜ் பண்டிகை விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

 ஆகஸ்ட் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை திங்கட்கிழமை வருகின்றது. செப்டம்பர் மாதத்திலும் வார இறுதியில் விடுமுறை வருகின்றது.

 நவம்பர் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை மற்றும் முஹம்மது பிறந்த நாள் ஆகியனவும் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4