வற் வரி தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tax #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
வற் வரி தொடர்பில்  நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள 18 வீத வற் வரியானது, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு மாத்திரமே பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்தையில் வெளியிடப்பட்ட பொருட்களுக்களுக்கு இந்தி அதிகரித்த வற் வரி பொருந்தாது என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, சந்தையில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், தன்னிச்சையாக விலைகளை அதிகரிக்கும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1704183563.jpg

மேலும், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல, வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும், வறிய மக்களையுமே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4