திருச்சியில் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்

#India #PrimeMinister #Tamil Nadu #D K Modi #லங்கா4 #University #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
திருச்சியில் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்

திருச்சி :திருச்சியில் ரூ.20,140 மதிப்பிலான 20 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

. இதற்காக திருச்சி வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் – ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

images/content-image/1704198303.jpg

அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து கூறினார். பட்டம் பெறும் மாணவர்களை டெல்லிக்கு வர விருப்பமா எனவும் பிரதமர் மோடி வினா எழுப்பினார். 

பிரதமர் மோடிக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் நினைவுப் பரிசு வழங்கினார்.இதையடுத்து துணை வேந்தர் செல்வம் வரவேற்பு உரையாற்றினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையாற்றினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!