50,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
50,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் 50,000 மெற்றிக் தொன் கீரி சம்பா இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகச் செயலாளர்  நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். 

இறக்குமதி செய்யப்பட்ட 01 கிலோகிராம் கீரி சம்பா 235 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதேவேளை, இன்று (02.01) அல்லது நாளை (03.01) கீரி சம்பா அரிசியின் ஒரு பகுதியை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக  வர்த்தக அமைச்சர் திரு.நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.  

50000 கிலோகிராம் கீரி சம்பா கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4