தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கும் ரகுல் பிரீத் சிங் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட படங்களாக இருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே பிரபல பொலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியை இவர் காதலித்து வந்தார். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி பெப்ரவரி 22ம் திகதி திருமணம் செய்துகொள்ள உள்ளார்களாம். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டு முதல் நட்சத்திர ஜோடியின் திருமணமாக ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள ஜாக்கி பக்னானி, தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



