இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.  

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள வேளையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர், பொறியியலாளர் நரேந்திர டி சில்வா இந்த சுற்றறிக்கையை விடுத்துள்ளார்.  

இதன்படி, இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நேற்று (02.12) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட கிளை/பிரிவில் இணைக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுப்பு எடுக்க முடியும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று (03.01) முதல் 3 நாள் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்திருந்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4