சில உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

#India #Food #Plastic #உணவு #லங்கா4 #நீதிமன்றம் #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
3 months ago
சில உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. 

images/content-image/1704293593.jpg

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்ல்லை. 

எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான விதிமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கபட்டது. இதனை தொடர்ந்து, பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.