குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி கூடுதல் டோஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது. 

தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் பிரதம விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்தார்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, காலி, கல்முனை ஆகிய 09 பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. 

சிறு குழந்தைக்கு அம்மை நோய் வந்தால் அது நீண்டகாலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது தடுப்பூசியின் கூடுதல் டோஸ் ஆகும். தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட டோஸ் முதிர்ச்சியடைந்த வயதில் பெறப்பட வேண்டும்." எனக் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4