தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மிகக் குறுகிய காலத்திற்குரியவை : அகிலவிராஜ் காரியவசம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news #Economic
Thamilini
2 years ago
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மிகக் குறுகிய காலத்திற்குரியவை : அகிலவிராஜ் காரியவசம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மிகக் குறுகிய காலத்துக்குரியவை எனவும், கூடிய விரைவில் நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்  அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தவிர வேறு ஏதேனும் நடைமுறைகள் இருப்பின் அந்த நபர் அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இன்று (04.01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த நிலைமை குறுகிய காலமானது. மக்களுக்கு மிக விரைவாக நிவாரணம் வழங்குவதே அரசின் நோக்கம். அமைப்பு மாற்றத்தில் இருந்து இந்த பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வுகளை மக்கள் எதிர்பார்த்தனர். இதற்கு வேறு வழியில்லை. வேறு வழி இருந்தால் இதைப் பற்றிச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!