அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜனிக்கு அழைப்பு

#Cinema #Actor #TamilCinema #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜனிக்கு அழைப்பு

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது.

 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. “பகவான் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

images/content-image/1704378965.jpg

 அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4