இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த மனுத்தாக்கல்

#Court Order #TamilCinema #Hospital #Director #Kollywood #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த மனுத்தாக்கல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

 இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'லியோ' திரைப்படத்தில் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.

images/content-image/1704394181.jpg

இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக அய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ'படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன? இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4