பிரான்ஸில் இவ்வார இறுதியில் பனிப்பொழிவு நிகழலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
#France
#weather
#அறிவித்தல்
#லங்கா4
#வானிலை
#Snow
#பிரான்ஸ்
#Predictions
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
1 year ago
இந்த வார இறுதியில் பிரான்சின் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. பிரான்சின் வடமேற்கு பிராந்தியம் முழுவதும் சென்ற வாரத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்திருந்தது.
தற்போது இந்த வார இறுதியில் நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெப்பநிலை மிகவும் வீழ்ச்சியடையும் எனவும், ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு பதிவாகும் எனவும் Météo France அறிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு பிரான்சில் 0°C வரை குளிர் நிலவும் எனவும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மேலும் குளிர் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு எல்லை நகரங்களில் -5°C வரை கடும் குளிரும் பனிப்பொழிவும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.