காதல் மனைவியை காரில் தரதரவென இழுந்து சென்ற கணவன் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

#India #Tamil Nadu #Tamilnews #Lanka4_india_news
Lanka4
10 months ago
காதல் மனைவியை காரில் தரதரவென இழுந்து சென்ற கணவன் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பிரிந்து வாழும் காதல் மனைவியை காரில் தரதரவென இழுந்து சென்ற கணவன் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அணக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவரது மகள் அபிஷா இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதலார் பகுதியை சேர்ந்த ஓவிய கலைஞரான பெர்லின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார் தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது அபிஷா கடந்த பிப்ரவரி மாதம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்றோருடன் வசித்து வருகிறார் தற்போது ஆற்றூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் கல்வியியல் கல்லூரிரில் பட்டபடிப்பு படித்து வரும் அபிஷா தினமும் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 இந்தநிலையில் நேற்று மாலை கல்லூரியிலிருந்து அபிஷா வீட்டிற்கு சென்று கொண்கிருந்தபோது அருவிக்கரை பாலம் பகுதியில் வைத்து கணவரான பெர்லின் காரில் வந்து வழிமறித்துள்ளார் தொடர்ந்து அபிஷாவை தாக்கிவிட்டு அவரது கையை பிடித்து தரதரவென இழுத்தபடியே காரை எடுத்து சென்றுள்ளார் இதையடுத்து அப்பகுதியிலிருந்த இளைஞர்கள் டாரை துரத்தவே அபிஷாவை விட்டுள்ளார் தலையில் தலைகவசம் அணிந்திருந்தால் அபிஷா சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினார் இதையடுத்து அப்பகுதியினர் அபிஷாவை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செர்து அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அபிஷாவை காரில் தரதரவென கணவர் பெர்லின் இழுத்து செல்லும் பதபதைக்கும் காட்சி பதிவாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவான பெர்லினை தேடிவருகின்றனர் பட்டபகலில் மனைவியை காரில் தரதரவென கணவர் இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!