அரசு பேருந்தில் மனநோயாளியை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர்
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே அரசு பேருந்தில் மனநோயாளியை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர் பதமகுமார் நடத்துனர் காந்தி ஆகிய இருவரை நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போகுவரத்து கழகம் பனியிடை நீக்கம் செய்து உள்ளது -
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே முடியாம்பாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் குலசேகரத்திலிருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்தில் ஆற்றூர் பகுதியிலிருந்து பயணம் செய்துள்ளார் அப்போது பேருந்து நடத்துனர் காந்தி என்பவர் மணிகண்டனிடம் பயண சீட்டுக்கு பணம் கேட்டுள்ளார் அப்போது நடத்துனர் காந்தியிடம் மணிகண்டன் வாக்குவாதம் ஈடுபட்டதோடு நடத்துனர் காந்தியை சராமரியாக தாக்கியுள்ளார் இந்நிலையில் நடத்துனரை ஒருவர் தாக்குவதை கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஓட்டுனர் ஆத்திரமடைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மணி கண்டனை சரமாரியாக தாக்கினர்.இந்த காட்சியை பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர் தற்போது சமூக வலைதலங்களில் வெளியான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் - கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே அரசு பேருந்தில் மனநோயாளியை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர் பதமகுமார் நடத்துனர் காந்தி ஆகிய இருவரை நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போகுவரத்து கழகம் பனியிடை நீக்கம் செய்து உள்ளது -