கனடாவைச் சேர்ந்த 80 வயது முதியவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்
#Canada
#Elder
#Lanka4
#பரிசு
#லொத்தர்
#Lottery
#லங்கா4
#முதியோர்
#Prize
#lanka4Media
#lanka4news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 canada tamil news
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் 80 வயதான முதியவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றுள்ளார். 80 வயதான எலன் ஸ்லோட் என்ற நபரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
லொட்டோ கோல்ட் போல் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருவதாக ஸ்டோல் தெரிவிக்கின்றார்.
வாரத்திற்கு இரண்டு தடவை லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்பதனை வாடிக்கையாக கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஒன்றாரியோவின் ஹமில்டன் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கார் ஒன்றை கொள்வனவு செய்ய உள்ளதாகவும், குடும்பத்துடன் பரிசுப் பணத்தை பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும், நன்கொடை வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



