தமிழகத்தில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்

#India #Tamil Nadu #Murder #couple #Tamilnews #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
தமிழகத்தில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்

தமிழகம் - சேலம் அருகே இளைஞர் ஒருவர் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 25 வயதான தியாகு என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் - பூனைக்கரடு பகுதியில் திருச்சி, துறையூரைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகைக்குக் குடி வந்தனர். இந்நிலையில் அத்தம்பதியை காண நண்பர்கள் எனக் கூறி இரு இளைஞர்கள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இவ்வாறு வருகைத்தந்த இளைஞர்களில் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பதியினர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தம்பதியினர் தங்கியிருந்த வீட்டில் மேற்கொண்ட சோதனையில் சில ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் தம்பதியினர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

 இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்யத பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!