பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து விலகியுள்ள மற்றுமோர் அமைச்சர் : கடும் பின்னடைவை சந்திக்கும் அரசாங்கம்!
இங்கிலாந்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சரான கிறிஸ் ஸ்கிட்மோர் ஆளும் பாராளுமன்ற கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தனது கட்சி உறுபுரிமையை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பல சவால்கள் எழுந்துள்ள நிலையில், கட்சி உறுப்பினர்களின் பதவி விலகள், மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2050 ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனின் நிகர பூஜ்ஜிய உறுதிப்பாட்டில் கையெழுத்திட்ட ஸ்கிட்மோர், தவறு என்று தெரிந்தும், அதை முன்னெடுக்கும் அரசாங்கத்திற்கு இனி ஆதரவளிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
டோரி எம்பி பீட்டர் போன் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ் ஸ்கிட்மோர் கட்சியில் இருந்து நீங்கியுள்ளது, வரும் மாதங்களில் மத்திய இங்கிலாந்தின் வெலிங்பரோ தொகுதியில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் சுனக்கிற்கு பெறும் பின்னடைவாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வாக்கெடுப்பில் இரட்டை இலக்க முன்னிலையில் உள்ளது. ஆகவே ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு இந்த தேர்தலில் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.