நான்கு வயது பெண் குழந்தையை தாக்கிய சிறுத்தை

#India #Tamil Nadu #Lanka4 #Tamilnews #Tamil News
Lanka4
3 months ago
நான்கு வயது பெண் குழந்தையை தாக்கிய சிறுத்தை

கூடலூர் அருகே நான்கு வயது பெண் குழந்தையை தாக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தொடங்கியது, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொலப்பள்ளி ஜேவியர் மட்டம் பகுதியில் கடந்த நான்காம் தேதி வசந்த் என்பவரது மகள் கீர்த்திகா (4) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறுத்தை ஒன்று கீர்த்திகாவை தாக்கியது அருகில் உள்ளவர்கள் கூச்சலடவே சிறுத்தை இடம் இருந்து குழந்தை கீர்த்திகா சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டார் மேலும் ஏற்கனவே இதே பகுதியில் 3 பெண்களை சிறுத்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது, இதனைத் தொடர்ந்து மனிதர்களை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்கக்கோரி நேற்றைய தினம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர் இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலரின் பரிந்துரைப்படி முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் இடம் அனுமதி பெற்று சிறுத்தையை மயக்கும் ஊசி செலுத்தி பிடிக்கும் பணி முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை கண்காணித்து மயக்க ஊசி செலுத்த தேடி வருகிறார்கள் சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் அச்சத்துடனே நடமாட வேண்டிய சூழ்நிலை அப்பகுதியில் உருவாகியுள்ளது மேலும் வனத்துறையினர் தெரிவிக்கையில் சிறுத்தையை மயக்கு ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என்றும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்,