இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானிற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

#Cinema #TamilCinema #Director #Lanka4 #Birthday #Music #wishes #lanka4Media #lanka4news #lanka4.com
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானிற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு நடிகரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 "துள்ளல் இசையாலும் - தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

images/content-image/1704532331.jpg

நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும்" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலினும் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ரஹ்மானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்." என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4