ஊழியர்களின் போராட்டம் - ஒழுக்காற்று நடவடிக்கைக்குத் தயாராகும் கஞ்சன

#SriLanka #Protest #Lanka4 #kanchana wijeyasekara #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
ஊழியர்களின் போராட்டம் - ஒழுக்காற்று நடவடிக்கைக்குத் தயாராகும் கஞ்சன

பணிக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி, தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சார சபைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த தகவல்களை அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1704532624.jpg

2024 ஆம் ஆண்டு ஜனவரி 3, 4, 5 ஆம் திகதிகளில் சில ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணத்தால், பொதுச் சேவை பணிகள் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி மூலம் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் 2 ஆம் திகதி முதல் இரத்துச் செய்து அந்த சேவைகள் அத்தியாவசியமானது என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4