காலி சிறைச்சாலைக்கு வரும் புதிய கைதிகளை இடமாற்ற நடவடிக்கை!

#SriLanka #Prison #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காலி சிறைச்சாலைக்கு வரும் புதிய கைதிகளை இடமாற்ற நடவடிக்கை!

காலி வைத்தியசாலையில் உள்ள எட்டு கைதிகள் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நிலையில் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி. பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

மூளைக்காய்ச்சல் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காலி சிறைச்சாலையின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 04 முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பார்வையாளர் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

காலி சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்க உள்ள அனைத்து புதிய கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

அதேபோல் காலி சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4