அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் ரணில் தோற்கடிக்கப்படுவார் : அனுர குமார திஸாநாயக்க!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #AnuraKumaraDissanayake #Sri LankaElection
Thamilini
2 years ago
அடுத்து  எந்த தேர்தல் வந்தாலும் ரணில் தோற்கடிக்கப்படுவார் : அனுர குமார திஸாநாயக்க!

அடுத்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் அல்லது பொதுத் தேர்தலாக இருந்தாலும்  ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய ஜனாதிபதி பதவி அத்தோடு முடிவடையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்.   முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால்  ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்படுவார். 

தேசிய மக்கள் படை அடிமட்டத்தில் எழுந்துள்ள விழிப்புணர்வை அறிந்து, அடுத்து எந்தத் தேர்தலை நடத்துவது என்ற சந்தேகம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்தேசிய மக்கள் சக்திக்கு பாதகமான தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4