வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் சனத்தொகை!

#SriLanka #Lanka4 #population #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் சனத்தொகை!

எதிர்வரும் காலங்களில் இந்நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா கூறுகிறார். 

இலங்கையில் பிறப்பு வீதத்தில் 25 வீதம் குறைவடைந்துள்ளமை முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என சுட்டிக்காட்டிய அவர், தற்போது பிறப்பு வீதம் வேகமாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

உதாரணமாக, 2013 இல் நம் நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 90,000 குறைந்துள்ளது. 

வேறுவிதமாகக் கூறினால், 2013 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2022 ஆம் ஆண்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் குறைந்துள்ளது என அவர் விளக்கியுள்ளார். 

அதேநேரம் இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் சனத்தொகை குறையலாம் எனவும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4