பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவசர சந்திப்பு பேச்சுவார்த்தை

#PrimeMinister #France #Meeting #President #லங்கா4 #ஜனாதிபதி #பேச்சு #Emergancy #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவசர சந்திப்பு பேச்சுவார்த்தை

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Elisabeth Borne ஆகிய இருவருக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

 எலிசே மாளிக்கைக்கு வருகை தந்த பிரதமர், ஜனாதிபதியைச் சந்தித்து முக்கியவிடயங்கள் தொடர்பில் உரையாடினார்க்ள். அதில் குறிப்பாக அமைச்சர்கள் மாற்றம், பா-து-கலேயை பாதித்த வெள்ளம் மற்றும் இவ்வாரத்தில் பிரான்சில் ஆரம்பமாக உள்ள பனிப்பொழிவு போன்ற சாராம்சங்களை உள்ளடக்கி உரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.

images/content-image/1704711217.jpg

 அமைச்சர்கள் பலர் மாற்றியமைக்கப்பட உள்ளதாக பல செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரும் நிலையில், நாளை மறுநாள் 10 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளது.

 அதன்போது சில அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து வேறு அமைச்சுப் பதவிக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் குடிவரவு சட்டத்திருத்ததை நடைமுறைப்படுத்தியதில் இருந்து அரசு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்த ‘அமைச்சரவை சங்கீத கதிரை’ திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!